விஜயதாசவின் அமைச்சரவை அதிகாரங்களை அகற்றுமாறு கோரிக்கை

250 0

அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவின் அமைச்சரவை அதிகாரங்களை விலக்கிக் கொள்ளுமாறு ஐக்கிய தேசிய கட்சித் தலைமைத்துவம் ஜனாதிபதியிடம் கோரியுள்ளது. 

ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழுவில் இது தொடர்பில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கட்சியின் பொது செயலாளர் கபீர் ஹாசிம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானங்களுக்கு இசைவாக அவர் செயற்படாததன் காரணமாக இந்ததீர்மானம் எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் மற்றும் அரசின் கொள்கைகளை விமர்சிக்கும் வகையில் அவர் செயற்பட்டதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

Leave a comment