இத்தாலி தீவுப்பகுதியில் நிலநடுக்கம் – கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி

209 0

இத்தாலி நாட்டுக்கு அருகே உள்ள சுற்றுலா தலமான இஸ்சியா தீவில் 4.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐரோப்பிய நாடான இத்தாலிக்கு அருகே நேப்லெஸ் கடலில் அந்நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள இஸ்சியா தீவு பிரபல சுற்றுலா தலமாக உள்ளது. இந்நிலையில், உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை தீவின் முக்கிய பகுதியான காஸ்மிக்சிலோ உள்ளிட்ட பல இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின.

தேவாலயம் ஒன்று இந்த நிலநடுக்கத்தால் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பலர் இதனால் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், உயிர் சேதம் குறித்தான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

Leave a comment