குழந்தை பெற்ற சில நிமிடத்தில் லிப்டில் சிக்கி பெண் உடல் துண்டாகி பலி

371 0

தனியார் ஆஸ்பத்திரியில் குழந்தை பெற்ற பெண் ஸ்ட்ரெச்சரில் வார்டுக்கு கொண்டு செல்லும் போது லிப்டுக்குள் சிக்கி தலை வேறு, உடல் வேறு என இரு துண்டுகளாகி பரிதாபமாக இறந்தார்.

ஸ்பெயினில் சேவிலே அருகேயுள்ள தாஸ் ஹெர்மனாஸ் நகரை சேர்ந்தவர் ரோசியோ கார்டெஸ் நுனெஷ் (25). இவருக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் நிறை மாத கர்ப்பிணியாக இருந்த ரோசியோவை கேவிலே நகரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. அதைத் தொடர்ந்து அவரை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து வார்டுக்கு ‘லிப்ட்’ மூலம் கொண்டு சென்றனர்.

அப்போது லிப்டுக்குள் நுழையும்போது எதிர்பாராத விதமாக அது செயல்பட தொடங்கியது. அந்த நேரம் ஸ்ட்ரெச்சரில் படுத்திருந்த ரோசியோவின் தலையை ‘லிப்ட்’ கதவு நசுக்கியது.

இதனால் அவர் தலை வேறு, உடல் வேறு என இரு துண்டுகளாகி பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

Leave a comment