ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய 13 மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொதிகள் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் தற்சமயம் இடம்பெற்று வருகின்றது.மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக தெரிவு செய்யப்பட்ட விவசாய குடும்பங்களுக்கு இவ்வாறு உலர் உணவு பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன.
இந்த உலர் உணவு பொதியில் கோதுமை மா, பருப்பு, சீனி, கடலை மற்றும் தகர பேணியில் அடைக்கப்பட்ட மீன் உள்ளிட்டவை அடங்குகின்றன.
இந்த திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடி நீர் வழங்குவது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

