ஷேக் ஹசீனாவை கொல்ல முயற்சி – 10 பேருக்கு மரண தண்டனை

2713 29

பங்காளதேஸ் பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த 2000ஆம் ஆண்டில் கொலை செய்ய முற்பட்ட 10 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த 2000ஆம் ஆண்டில் தனது சொந்த ஊரான கோபால்கஞ்ச் பகுதியில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அப்போது, அந்த நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள ஹர்க்கத்துல் ஜிஹாத்-இ-இஸ்லாமி அமைப்பினர் அவரை வெடிகுண்டு தாக்குதல் மூலம் கொல்ல முயன்றனர்.

பாதுகாப்பு படையினர் இந்த கொலை முயற்சியை முறியடித்து உரிய நேரத்தில் வெடிகுண்டுகளை கைப்பற்றி செயலிழக்க வைத்தனர்.

இந்த கொலை முயற்சி தொடர்பாக சுமார் 25 பேர்மீது டாக்காவில் உள்ள விரைவு நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இவ்வழக்கில் தொடர்புடையை ஹர்க்கத்துல் ஜிஹாத்-இ-இஸ்லாமி அமைப்பின் தலைவர் மற்றொரு தீவிரவாத தாக்குதல் தொடர்பான வழக்கில் கடந்த ஆண்டு தூக்கிலிட்டு கொல்லப்பட்டார்.

இந்த நிலையில், ஷேக் ஹசீனாவை கொல்ல முயன்ற வழக்கில் நீதிபதி மம்தாஜ் பேகம் தீர்ப்பளித்தார்.

அதன்படி, குற்றவாளிகளில் பத்து பேருக்கு மரண தண்டனையும், ஒன்பது பேருக்கு அபராதத்துடன் கூடிய 20 ஆண்டு சிறை தண்டனையும் விதித்த நீதிபதி, நான்கு பேரை இவ்வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டார்

Leave a comment