வத்தலக்குண்டுவில் டி.டி.வி. தினகரன் பேனரை அகற்றிய டிராபிக் ராமசாமி

2421 14

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பஸ்நிலையம் முன்பு காதணி விழாவுக்காக டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் பிளக்ஸ் பேனர்களை வைத்திருந்தனர்.

விழா முடிந்து ஒரு வாரத்துக்கு மேலாகியும் பேனர்களை அகற்றவில்லை.
கொடைக்கானல் செல்வதற்காக அவ்வழியே வந்த டிராபிக் ராமசாமி இந்த பேனர்களை பார்த்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததால் அகற்ற முயன்றார்.

இதனையடுத்து வத்தலக்குண்டு காவல்துறையினர், அனுமதியின்றி வைக்கப்பட்ட டி.டி.வி.தினகரன் பேனர்களை அகற்றினர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a comment