எடப்பாடி அரசு தானாகவே கவிழ்ந்துவிடும் –  டி.கே.எஸ்.இளங்கோவன் 

20692 48

எடப்பாடி அரசு தானாகவே கவிழ்ந்துவிடும் என திராவிட முன்னேற்ற கழகத்தின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவிடமாக சட்டப்படி மாற்றுவது சாத்தியமல்ல.

வாரிசுதாரர்களிடம் கேட்க வேண்டும். தனியார் சொத்தை பறிமுதல் செய்யக்கூடாது.

இந்த அரசு தானாகவே கவிழ்ந்துவிடும். தேவைப்பட்டால் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம்.

அரசின் தவறுகளை சுட்டிக்காட்டவே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம் என கூறினோம்.

இணைப்பில் கவனம் செலுத்துவது போல் அவர்கள் குடிநீர் போன்ற மக்கள் பிரச்சினையில் கவனம் செலுத்தவில்லை.

பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா தமிழகத்திற்கு வந்து மீண்டும் 2வது முறையாக தோல்வியுடன் தான் திரும்புவார் என டி.கே.எஸ்.இளங்கோவன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment