காணாமற்போனோர் பணியகம் கொழும்பிலேயே செயற்படும்!

290 0

thai (1)காணாமற்போனோர் பணியகச் சட்டத்தில் சபாநாயகர் கையெழுத்திட்டபின்னர், இந்தப் பணியகத்துக்கான 7 உறுப்பினர்களை அரசியலமைப்புச் சபை பரிந்துரைக்கும் என சிறீலங்காவின் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்த வாரங்களில் காணாமற்போனோர் பணியகத்தை உருவாக்குவதற்கான பணிகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. அரசியலமைப்பு சபை தனது பரிந்துரைகளைச் சமர்ப்பித்த 15 நாட்களுக்குள் சிறிலங்கா அதிபர், காணாமற்போனோர் பணியகத்தின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களை நியமிப்பார்.

நியமனங்கள் விரைவில் மேற்கொள்ளப்படும், எனினும் சபாநாயகரின் கையொப்பத்துக்காகவே காத்திருக்கின்றோம். இந்தப் பணியகம் இந்த ஆண்டு இறுதிக்குள் செயற்படத் தொடங்கும்.

அதன் ஆயுட்காலம் 3 ஆண்டுகளாக இருக்கும். எல்லா இனத்தவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி 7 உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர்.

காணாமற்போனோர் தலைமையகம் கொழும்பிலேயே இயங்கும். தேவையேற்படின் பிராந்தியத்தில் இதன் அலுவலகங்களை அமைக்கமுடியும்.

இதன் உறுப்பினர்களாக இருப்பவர்கள் உண்மை கண்டறிவதில், விசாரணைகளை மேற்கொள்வதில், மனித உரிமைச் சட்டங்களில், அனைத்துலக மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்டங்களில் அனுபவம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.’ என்றும் அவர் குறிப்பிட்டார்.