நீண்டகால பேச்சுவார்த்தைகளின் பின்னர், தமிழ்நாட்டின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் நிலவிய பிணக்கு தீர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அணியும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் அணியும் இன்றையதினம் ஒன்றிணைந்துள்ளன.
அத்துடன் ஓ.பன்னீர்செல்வம் துணை முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார்.
மேலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் பதவியும் பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் புதிய அமைச்சரவையுடன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வழிநடத்திச் செல்வதற்கான குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகின்ற சசிக்கலா நடராஜனை நிரந்தரமாக கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க பழனிச்சாமி தரப்பு இணக்கம் தெரிவித்துள்ளது.
இதன்அடிப்படையிலேயே பன்னீர்செல்வம் தரப்பினர் மீளிணைவுக்கு சம்மதித்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

