களுத்துறையில் கைத்தொழில் வியாபார வலயம்

280 0

களுத்துறை மில்லனிய பிரதேசத்தில் கைத்தொழில் வியாபார வலயம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு இலங்கை முதலீட்டு சபை மற்றும் தாய்லாந்து நிறுவனம் ஒன்றுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

முதலீட்டு சபையின் தலைவர் துமிந்த்ர ரத்நாயக்க மற்றும் தாய்லாந்து ரொஜானா நிறுவனத்தின் தலைவர் டிரேக் விநிச்புட்டர் ஆகியோர் குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வேலைத் திட்டமானது 2018 டிசம்பர் மாதம் ஆரம்பிக்கப்படும் என்றும் இதன் மூலம் சுமார் 10,000 வேலை வாய்ப்புக்களை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு இளைஞர் யுவதிகளுக்கும் குறித்த திட்டத்தின் மூலம் வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சூழல் மதிப்பீட்டு அறிக்கையை கவனத்தில் கொண்டு சுமார் 400 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படவிருக்கும் இந்த வியாபார வலயத்திற்கு சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவின் பணிப்பின் பேரில் முதலீட்டு சபையின் உதவியும் வழங்கப்படும் என சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க மேலும் தெரிவித்தார்.

Leave a comment