தீடிரென ஏற்பட்ட மின்வலு அதிகரிப்பினால் 25 வீடுகளில் மின்சார உபகரணங்கள் பாதிப்பு

239 0

கொட்டகலை பாத்தியாபுர கிராம பகுதியில் வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள மின்சாரத்தில் அதிக மின் வலு ஏற்பட்டதால் அக் கிராமத்தில் 25 வீடுகளில் மின்சார உபகரணங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

தீடிரென ஏற்பட்ட மின்வலு அதிகரிப்பினால் இந்த மின்சார உபகரணங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இதனால் ஒவ்வொரு குடும்பத்திலும் அதி விலை உயர்ந்த மின்சார உபகரணங்கள் பழுதடைந்துள்ளன.

தொலைக்காட்சி பெட்டி, கணனி, குளிர்சாதனப் பெட்டி, வானொலி ஆகியன செயலிழந்து பழுதுக்குள்ளாகியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கென பாரிய தொகையினை செலவு செய்து திருத்தி கொள்ள வேண்டும் எனவும், இதனால் தாம் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாவும் பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Leave a comment