அடுத்த நீதி அமைச்சராக ஜயம்பதி விக்ரமரட்ன

295 0

விஜயதாச ராஜபக்சவிற்கு பதிலாக பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரட்னவை நீதி அமைச்சராக நியமிக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

இதன்படி, புதிய நீதி அமைச்சராக ஜயம்பதி விக்ரமரட்னவை நீதி அமைச்சராக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

தற்போதைய நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச விசேட செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தி இன்று அல்லது நாளை பதவியை இராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

லக்ஸ்மன் கிரியல்ல, அஜித் பெரேரா மற்றும் ஜயம்பதி விக்ரமரட்ன ஆகியோரின் பெயர்கள் நீதி அமைச்சர் பதவிக்காக பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

எனினும் இதில் ஜயம்பதி விக்ரமரட்னவை நீதி அமைச்சராக நியமிக்க அனைவரும் இணங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அவ்வாறு அமைச்சுப் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு கோரப்பட்டால் தாம் பிரதிநிதித்துவம் செய்யும் சமசமாஜ கட்சியின் கருத்தையும் அறிந்து கொண்டு தீர்மானம் எடுப்பதாக ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்

Leave a comment