நீதியமைச்சருக்கு நெருக்கடி வலுக்கிறது.

336 0

நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழுவினால் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளது.

பிரதியமைச்சர் அஜித் பீ பெரேரா இதனைத் தெரிவித்தார்.

எழுத்து மூலமாகவோ அல்லது வாய்மூலமாகவோ இன்றைய தினம் குறித்த அறிக்கை கட்சியின் தலைவரிடம் கையளிக்க இடமுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தொடர்பில் இன்று மாலை ஐக்கிய தேசிய கட்சியின் விசேட ஒன்றுகூடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பு பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது.

கடந்த வாரம் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இன்று மாலை ஜனாதிபதி  சிறிசேன தலைமையில் அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டம் ஒன்றும் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a comment