3 அதிவேகப் பாதைகள் சீனாவிற்கு விற்க அரசாங்கம் தயார் – உதய

214 0

தற்போதைய அரசாங்கம் 3 அதிவேகப் பாதைகளை சீனாவிற்கு விற்கவுள்ளதாக பிவிதுரு ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க,தெற்கு மற்றும் கொழும்பு அதிவேகப் பாதைகளை அதிகாரசபையின் கீழ் கொண்டு வந்து அதன் மூலம் 600 மில்லியன் டொலருக்கு இதனை சீனாவின் செங்டோக் நிறுவனத்திற்கு விற்பதற்கு தயாராகிவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே உதய கம்மன்பில இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் எந்தவொரு விற்கவில்லை எனத் தெரிவித்து 35 வருட குத்தகைக்கு விடுவதாகவும்,10 வருடங்களுக்கு மேல் குத்ததைக்கு விடுவதென்பது விற்றதற்கு சமன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வார அமைச்சரவை சந்திப்பில் இதுதொடர்பான பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே நாட்டிலுள்ள அனைத்து சொத்துக்களையும் விற்று இறுதியில் இந்நாட்டில் விற்பதற்கு மக்கள் மட்டுமே எஞ்சியுள்ளதாகவும்,அந்த காலம் வரும் வரை காத்திருக்காமல் விற்பனைக்கு எதிராக வீதிக்கு இறங்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment