உயர்தரப் பரீட்சையின் வினாத்தாள் வௌியான சம்பவம்; தந்தை சகோதரன் கைது

435 0

இம்முறை க.பொ.த. உயர் தரப் பரீட்சையின் இரசாயன விஞ்ஞானம் பகுதி 2 இற்கான வினாப்பத்திரத்தில் வந்திருந்த சில வினாக்கள் மேலதிக வகுப்பு நடத்தும் ஆசிரியர் ஒருவரினால் வழங்கப்பட்ட ​கையேட்டில் உள்ளடக்கப்பட்டிருந்தமை தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த ஆசிரியரின் தந்தை மற்றும் சகோதரரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக விஷேட விசாரணை ஒன்றை ஆரம்பிக்குமாறு பொலிஸாரிடம் எழுத்து மூலம் கேரிக்கை விடுத்ததாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார கூறியிருந்தார்.

அதன்படி குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரினால் விஷேட விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

விசாரணைகளுக்கமைய சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியரின் தந்தை மற்றும் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த ஆசிரியிர் தலைமைறவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

க.பொ.த. உயர் தரப் பரீட்சையின் இரசாயன விஞ்ஞானம் பகுதி 2 இற்கான வினாப் பத்திரத்தில் வந்திருந்த சில வினாக்கள் தொடர்பில் ஏற்கனவே தனது மேலதிக வகுப்பில் கலந்துரையாடப்பட்டதாக கூறி, மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவரினால் கடந்த 19ம் திகதி கம்பஹா பிரதேசத்தில் உள்ள பரீட்சை மண்டபம் ஒன்றிற்கு அருகில் துண்டுப்பிரசும் விநியோகிக்கப்பட்டிருந்தது.

Leave a comment