36 மணித்தியாலங்களில் 27 இந்தியர்கள் கைது

338 0

வீசா காலம் முடிந்த பின்னரும் சட்டத்துக்கு புறம்பாக இலங்கையில் தங்கியிருந்த 27 இந்தியர்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விஷேட நடவடிக்கையில் கடந்த 36 மணித்தியாலங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

சட்டத்துக்கு புறம்பாக தங்கியிருந்த 5 பெண்கள் உட்பட 27 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றுலா வீசாவில் வருகை தந்துள்ள அவர்கள் இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்து பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டுள்ள குறித்த இந்தியப் பிரஜைகளை நாளை (22) நாட்டிலிருந்து அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் கூறியுள்ளது.

இந்தியாவின் தென் மாநிலங்களைச் சேர்ந்த குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் வேலை தேடி இலங்கைக்கு வருவதாக இந்திய ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

Leave a comment