புதிய வருமான வரிச் சட்டமூலத்தை எதிர்க்கும் மஹிந்த

231 0

ஆகஸ்ட் மாதம் 25ம் திகதி பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட உள்ள உள்நாட்டு இறைவரிச் சட்டமூல வரைவை எதிர்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் இன்று அவர் வௌியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாகவது,

தற்போது நடைமுறையில் இருக்கின்ற 2006ம் ஆண்டு 10ம் இலக்க தேசிய உள்நாட்டு இறைவரிச் சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டமூலம் ஒன்று 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுக்கப்பட உள்ளதாக கூறியுள்ள அவர் அதை எதிர்ப்பதற்கான சில காரணங்களையும் கூறியுள்ளார்.

புதிய சட்டமூலத்தின் படி, அனைத்து வணக்கஸ்தலங்களுக்கும் வரி விலக்களிக்கப்பட்டிருப்பது நீக்கப்பட்டு, வணக்கஸ்தலங்கள் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்களுக்கும் 14% வரி அறவிடப்பட உள்ளது.

அதேபோல் இந்த சட்டமூலத்தினூடாக சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களுக்கு தற்போது நடைமுறையிலுள்ள 12% வரி 14% ஆக அதிகரிக்கப்பட உள்ளது.

அத்துடன் கைத்தொழில் உற்பத்தி, திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடகத் தயாரிப்புக்களுக்கான வரி நிவாரணம் குறத்து நடைமுறையிலுள்ள 2006ம் ஆண்டு சட்டத்தின் 3வது அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது. எனினும் இவை அனைத்து புதிய முன்வரைவு இறைவரிச் சட்டமூலத்தில் நீக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இந்த வருமான வரி சட்டமூல வரைவில் உள்ளடக்கட்டுள்ள விடயடங்கள் ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைகளே அன்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளடக்கங்கள் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

இது போன்ற பல காரணங்களுக்காக இந்த சட்டமூல வரைவு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் போது அனைத்து  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்களும் உறுப்பினர்களும் எதிராக வாக்களிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Leave a comment