இலங்கை நீதித்­து­றையில் கடும் பாது­காப்­புக்கு உரி­ய­வ­ராக நீதி­பதி இளஞ்­செ­ழியன்

8713 0

இலங்கை நீதித்­து­றையில் யாழ். மேல் நீதி­மன்ற நீதி­பதி இளஞ்­செ­ழி­ய­னுக்கு விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­ன­ருடன் கூடிய விசேட பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது.

கடமை நேரத்தில் நீதி­மன்­றத்­திலும், அவ­ரு­டைய வாசஸ்­த­லத்­திற்கும் இந்த விசேட பாது­காப்பை அர­சாங்கம் வழங்­கி­யுள்­ளது.

நல்லூர் துப்­பாக்­கிச்­சூட்டுச் சம்­ப­வத்­தை­ய­டுத்து, நீதி­பதி இளஞ்­செ­ழி­ய­னுடன் உட­ன­டி­யாகத் தொடர்பு கொண்ட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அந்தச் சம்­பவம் பற்­றிய விப­ரங்­களைக் கேட்­ட­றிந்­த­துடன், அவ­ரு­டைய பாது­காப்பு தொடர்­பி­லான விட­யங்­க­ளிலும் கூடிய கவனம் செலுத்­தி­யி­ருந்தார்.

அதேநேரம் இலங்­கைக்­கான அமெ­ரிக்க தூதுவர், அத்துல் ஹேசாப் நீதி­ப­தி­யுடன் தொடர்பு கொண்டு,  நல்லூர் துப்­பாக்கிச் சூட்டுச் சம்­பவம் பற்­றிய விப­ரங்களைக் கேட்­ட­றிந்­த­துடன், அவ­ரு­டைய பாது­காப்பு தொடர்­பா­கவும் கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தார்.

இத­னை­ய­டுத்து, நீதி­பதி இளஞ்­செ­ழி­ய­னுக்கு அதி­ர­டிப்­படை பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது.

யாழ்ப்­பாணம் செம்­மணி புதை­குழி வழக்கு விசா­ர­ணைக்­கான விசேட நீதி­ப­தி­யாக நீதி­பதி இளஞ்­செ­ழியன் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­த­போது,  ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ரதுங்­க­வினால் அவ­ருக்கு விசேட பாது­காப்பு வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

அச்­ச­மயம் அமெ­ரிக்க தூது­வ­ராக இருந்த ஏட்லி வில்ஸ்சும் நீதி­ப­தியின் பாது­காப்பு சம்­பந்­த­மாக விசேட கவனம் செலுத்­தி­யி­ருந்தார்.

நீதி­பதி இளஞ்­செ­ழியன் வவு­னி­யாவில் கட­மை­யாற்­றி­ய­போது, அவ­ருக்கு சிக்மா மோட்டார் சைக்கிள் படை­யணி பாது­காப்பு வழங்­கி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

தற்­போது அவ­ரு­டைய பாது­காப்­புக்­காக விசேட அதி­ர­டிப்­ப­டையைச் சேர்ந்த எட்டுப் பேர் அடங்­கிய குழு­வினர், அவர் நீதி­மன்­றத்தில் கட­மையில் இருக்­கும்­போது பாது­காப்பு வழங்­கு­வ­தற்­காக நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் ரொசான் பெர்னாண்டோவின் கட்டளையின்படி யாழ். பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் அவருடைய வாசஸ்தலத்துக்குப் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

Leave a comment