ஆளும் அரசாங்கத்தில் இருக்கும் கள்வர்கள் யார் என அறியப்படவில்லை என ஜே.வி.பி தெரிவித்துள்ளது. ஹாலிஎல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் வைத்து கட்சியின் செயலாளர் டில்வின் சில்வா இதனைக் குறிப்பிட்டார்.
2015ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் மக்கள் இந்த இரண்டு பிரதான கட்சிகளுக்கும் ஆட்சி அமைக்க அனுமதி தரவில்லை.
எனினும் அந்த கட்சிகள் இரண்டும் இணைந்து ஆட்சி அமைத்தன.மக்கள் அதனை தற்போது வெறுக்கின்றனர்.
அரசாங்கம் கூறிய எதுவும் இதுவரையில் இடம்பெறவில்லை.
கள்வர்கள் பிடிக்கப்படுவார்கள், தண்டனை வழங்கப்படும், மோசடிகளை நிறுத்தப்படும் என்று கூறினார்கள்.எனினும் ஒன்றும் இதுவரையில் நடந்ததாக தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


