புலமை பரிசில் பரீட்சையில் தோற்றவிருந்த மாணவியின் தாய் கொலை

359 0

ஊவாபரணகம – தம்பகஹாபிட்டிய பிரதேசத்தில் கூரியு ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவரது கழுத்து துண்டிக்கப்பட்டு இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பெண்ணின் மகள், நேற்று இடம்பெறவிருந்த 5 ஆம் தர புலமை பரிசில் பரீட்சையில் தோற்றவிருந்த மாணவியென தெரியவந்துள்ளது.

கடந்த 19 ஆம் திகதி இரவு இந்த கொலை இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளவர் அதே பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான பெண்ணொருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதவான் விசாரணை இடம்பெறும் வரை சடலம் அதே இடத்தில் காவற்துறை பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

கொலை செய்துள்ள சந்தேக நபர், அந்த பெண்ணின் கள்ளக்காதலர் என இனங்காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் அந்த பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

அவரை தேடி ஊவாபரணகம காவற்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

Leave a comment