பாரிய தீ காயங்களுடன் இரண்டு மாத பெண் குழந்தை மருத்துவமனையில்

351 0
பாரிய தீ காயங்களுடன் இரண்டு மாத பெண் குழந்தை ஒன்று, கிளங்கன் மருத்துவமனையில் இருந்து நாவலபிட்டி மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது.
பொகவந்தலாவ – குயினா கிழ்பிரிவு தோட்டத்தில் 2 மாத பெண்  குழந்தை ஒன்று தவறி அடுப்பில் விழுந்தாக கூறி பாரிய தீ காயங்களுடன் பொகவந்தலாவ மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.
இந்த சம்பவம் நேற்று மாலை மாலை 6.15 அளவில் இடம்பெற்றதாக பொகவந்தலாவ காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
குழந்தையின் தாய் வீட்டு வேலைகளில் ஈடுபட்டு கொண்டிருந்த போது இரண்டு மாத குழந்தை அடுப்பில் தவறி விழுந்தாக தாய் மருத்துவமனைக்கு தெரிவித்துள்ளார்.
எனினும் அதுதொடர்பில் மருத்துவர்கள் பொகவந்தலாவ காவல்துறையினருக்கு அறிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment