கல்வி பொதுத் தராதரப் பத்திர உயர்தர பரீட்சை வினாக்களை விநியோகித்த குற்றச்சாட்டில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தந்தை மற்றும் மகன் ஆகியோரே கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவர்கள் இருவரும் மேலதிக வகுப்பு நடத்தி வந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இம்முறை இடம்பெற்ற உயர்தர பரீட்சையின் இராசாயனவியல் வினாப்பத்திரத்தில் இடம்பெற்ற சில வினாக்களை கொண்ட கையேடுகளை விநியோகித்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கம்பஹாவை சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

