இலங்கை ஆசிரிய கல்வியியலாளர் சேவையில் பாதிக்கப்பட்டோருக்கான அவசர கலந்துரையாடல்

444 0

இலங்கை ஆசிரிய கல்வியியலாளர் சேவை (SLTES) -||| இற்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த, தொழில் சார் பாடங்களுக்கு விண்ணப்பித்து முதலாவது நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டு கல்வியியலில் முதல் பட்டம் இல்லை எனக் காரணம் கூறப்பட்டு இரண்டாவது நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படாது பாதிக்கப்பட்டவர்களின் வழக்குத் தாக்கல் தொடர்பான கலந்துரையாடல் நடைபெறவுள்ளது

எதிர்வரும் 22-08-2017  செவ்வாய்கிழமை மு.ப 9.00 மணிக்கு யாழ்ப்பாணம்  இந்து ஆரம்ப பாடசாலைக்கு முன்பாக உள்ள “எடிசன் அக்கடமி” இல் நடைபெறவுள்ள இக் கலந்துரையாடலில் இலங்கை ஆசிரியர் சங்கப் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்.

பாதிக்கப்பட்ட அனைவரும் கலந்து கொண்டு  இலங்கை ஆசிரியர் சங்கத்தினூடாக நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்ய ஒத்துழைக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

Leave a comment