கேரள கஞ்சாவுடன் ஹட்டனிலும் யாழ்ப்பாணத்திலும் இருவர் கைது

737 0

போதை மாத்திரை மற்றும் கேரள கஞ்சாவுடன் ஒருவர் ஹட்டனில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மதுவரித் திணைக்களத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் இருந்து 80 போதை மாத்திரைகளும் 15 கஞ்சா பக்கெட்டுக்களும் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்குரியவர் ஒரு போதை மாத்திரையை 300 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் இருந்;து நீர்கொழும்பிற்கு கேரள கஞ்சாவை கடத்திச்சென்ற ஒருவர் வவுனியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு கைதுசெய்யப்பட்ட இவரிடமிருந்து 2 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த கேரள கஞ்சாவை யாழ்ப்பாணத்தில் ஒன்றரை இலட்சத்திற்கு கொள்வனவு செய்து மூன்று இலட்சத்திற்கு விற்பனை செய்வதாக சந்தேகத்திற்குரியவர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment