குறிப்பிட்ட சிலர் மேற்கொண்ட மோசடிகள் காரணமாகவே நாடு கடன் நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளதாக ஜேவிபி தெரிவித்துள்ளது.
பொலனறுவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை பத்தாயிரத்து ஐநூறு பில்லியன் ரூபாய் கடனை செலுத்த வேண்டியுள்ளதாக பிரதமர் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
இந்த கடன் ராஜபக்ஷக்களாலும், சஜின்வாஸ் குணவர்தன மற்றும் ரவி கருணாநாயக்க போன்றவர்களால் ஏற்பட்டதாகும்.
அவர்கள் குறித்து முறையான விசாரணைகளை மேற்கொள்ளாமல் அரசாங்கம் அவர்களை பாதுகாத்துவருகின்றது.
எனவே,மோசடிக்காரர்களை பாதுகாக்கும் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, திருடர்களை உருவாக்கும் அரசாங்கம் ஒன்று அல்லாமல், திருடர்கள் அல்லாத அரசாங்கம் ஒன்றை உருவாக்க வேண்டும் என ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் மோசடியில் ஈடுபட்டவர்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு கையூட்டல் கொடுத்து தம்மை காப்பாற்றிக் கொள்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எனவே, தற்போதைய அரசாங்கம் மோசடி செய்பவர்களை தண்டிக்க அரசாங்கத்தால் முடியாது உள்ளதாக சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார்.

