புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகள்

11487 66
இன்று நடைபெற்று முடிந்த 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் பணிகளானது எதிர்வரும் 31ஆம் திகதி ஆரம்பமாகி செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்காக 40 மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்,இதன்கீழ் 384 மேற்பார்வை திணைக்களத்தின் 6965 ஆசிரியர்கள் வினாத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் டபிள்யு.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
3014 மத்திய நிலையங்கள் ஊடாக நடைபெற்ற 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 3,56,728 மாணவர்கள் தோற்றியிருந்ததுடன்,இதில் 562 விசேட தேவையுடைய மாணவர்களும் தோற்றியிருந்ததாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a comment