சிறிலங்காவின் நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நாளை பதவி விலகவுள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பௌத்த சாசன அமைச்சில் நாளை நடைபெறவுள்ள செய்தியாளர் சந்திப்பில் இதனை அறிவிப்பார்என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாளை அறிக்கை வெளியிட்டபின்னரே தனது பதவிவிலகலை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், அம்பாந்தோட்டைத் துறைமுகம் தொடர்பாக விஜயதாச ராஜபக்ஷ வெளியிட்ட கருத்தையடுத்துஅவர் அரசாங்கத்தில் நம்பிக்கை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, விஜேதாச ராஜபக்சவையும், அவரது சந்திப்புகளையும் அரச புலனாய்வுப் பிரிவு உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

