மன்னாரில் எண்ணெய், எரிவாயு அகழ்வதில் போட்டிபோடும் இந்தியா, சிங்கப்பூர்!

380 0

மன்னார் கடல் படுக்கையில் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வில் ஈடுபடுவதற்கு இந்தியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் ஆர்வம்காட்டி வருவதாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி செயலகத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம், சாலிய விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார்.

மன்னார் கடல்படுக்கையில் 13 துண்டங்கள் காணப்படுகின்றன. இவற்றில் எட்டுத் துண்டங்களுக்குசர்வதேச நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன.

இது வெற்றியளித்தால் சிறிலங்காவுக்கு நன்மையாக இருக்கும். ஏற்கனவே இந்தியாவின் கெய்ன் என்ற நிறுவனம் குறித்த கடல் படுக்கையின் 2ஆவது கடல் படுக்கையில் அகழ்வை மேற்கொண்டது.

எனினும், உலகளாவிய எரிபொருள் விலைச் சரிவை அடுத்து, இந்த துண்டத்தில் எரிவாயு அகழ்வு முயற்சியில் இருந்து விலகுவதாக, 2015ஆம் ஆண்டு கெய்ன் இந்தியா நிறுவனம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment