சுதந்திர தின உரையில் ஒலிம்பிக் வீரர்களை ஊக்கப்படுத்தி பேசுங்கள்

359 0

201608132051462266_Tendulkar-urges-Modi-to-talk-about-Rio-bound-athletes-on_SECVPFபிரதமர் மோடி சுதந்திர தின உரையாற்றும்போது நாட்டுக்காக ஒலிம்பிக்கில் விளையாடச் சென்றிருக்கும் வீரர்கள் பற்றி பேச வேண்டும் என சச்சின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதமர் மோடி புதிதாக அறிமுகம் செய்துள்ள மொபைல் அப்ளிகேசன் மூலம், நாட்டு மக்களிடம் தனது சுதந்திர தின உரை குறித்து ஆலோசனைகளை கேட்டிருந்தார். தனது உரையில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டும் என அவர் கேட்டிருந்தார். இதில், பலர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

அவ்வகையில், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது கருத்துக்கள் அடங்கிய கடிதத்தை பிரதமரின் அப்ளிகேசனுக்கு அனுப்பியுள்ளார். அதில், நாட்டுக்காக ஒலிம்பிக்கில் விளையாடச் சென்றுள்ள நமது வீரர்களைப் பற்றி பேசும்படி கேட்டுக்கொண்டார்.

“தங்களிடம் இருந்து வெளிப்படும் ஊக்கம் அளிக்கும் வார்த்தைகள், ஒலிம்பிக்கில் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ள சில வீரர்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும். அதேபோல் முன்னேறிக்கொண்டிருக்கும் மற்ற வீரர்களுக்கும் தூண்டுகோலாக இருக்கும்’’ என்று சச்சின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் நல்லெண்ண தூதுவரான சச்சின் தற்போது ஒலிம்பிக் நடைபெறும் ரியோ டி ஜெனீரோ நகரில் தங்கியிருந்து வீரர்களை ஊக்கப்படுத்தி வருகிறார்.