தலாய் லாமாவுடன் சல்மான் கான் சந்திப்பு

341 0

201608131557079460_Salman-meets-the-Dalai-Lama_SECVPFதிபெத்திய புத்தமத தலைவர் தலாய் லாமாவை இந்தி நடிகர் சல்மான் கான் தனது தோழியுடன் சென்று சந்தித்து பேசிய தகவல் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பரவி வருகிறது.

சீனாவின் ஆக்கிரமிப்பில் இருக்கும் திபெத் நாட்டின் விடுதலைக்காக நாடுகடந்த போராட்டம் நடத்திவரும் திபெத்திய புத்தமத தலைவர் தலாய் லாமா இந்தியாவில் தஞ்சம் அடைந்தபடி திபெத் விடுதலை போராட்டத்தை வழிநடத்தி வருகிறார்.

இந்நிலையில், வேகமாக தயாராகிவரும் தனது ‘டியூப்லைட்’ படத்தின் படப்பிடிப்புக்காக கடந்த ஒருமாதமாக காஷ்மீரில் தங்கியுள்ள சல்மான் கான், தனது தோழி லுலியா வான்ட்டோருடன் சமீபத்தில் தலாய் லாமாவை சந்தித்துள்ளார்.

லடாக் பகுதியில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது தலாய் லாமாவுடன் சல்மானும், லுலியா வான்ட்டோரும் பேசுவது போன்ற புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்கள் வாயிலாக படுவேகமாக பரவி வருகிறது.