தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை வெளி­யாட்கள் நுழை­வது முற்­றாகத் தடை

418 0

2017 ஆம் கல்­வி­யாண்­டிற்­கான தரம் ஐந்து புல­மைப்­ப­ரிசில் பரீட்சை நாளை நடை­பெ­ற­வுள்­ளது. இம்­முறை ஊர்­கா­வற்­றுறை, நயி­னா­தீவு, அன­லை­தீவு உட்­பட நாடு­பூ­ரா­கவும் அமைக்­கப்­பட்­டுள்ள மூவா­யி­ரத்து பதி­நான்கு பரீட்சை நிலை­யங்­களில் பரீட்சை நடை­பெ­ற­வுள்­ளது.

மூன்று இலட்­சத்து 56,728 பேர் பரீட்­சைக்குத் தோற்­ற­வுள்­ள­துடன் அதில் 562 பேர் விசேட தேவையுடைய மாண­வர்­க­ளாவர். இதே­வேளை பரீட்சைக் கட­மை­களில் 28 ஆயிரம் பேர் ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இரு வினாப்­பத்­தி­ரங்­களைக் கொண்ட குறித்த பரீட்­சையின் முதல் வினாப்­பத்­திரம் காலை 9.30 மணி தொடக்கம் 10.15 மணி வரை நடை­பெ­ற­வுள்­ளது. இரண்டாம் வினாப் பத்­திரம் காலை 10.45 முதல் நண்­பகல் 12 மணி வரை நடை­பெ­ற­வுள்­ளது. எனவே பரீட்­சார்த்­திகள் காலை ஒன்­பது மணிக்கு பரீட்சை மண்­ட­பத்­திற்குள் பிர­சன்­ன­மாகி இருக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்­களம் வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.

மேலும் பரீட்­சார்த்­திகள் பரீட்­சைக்­கான சுட்­டெண்ணை தமது உடையின் இடது பக்­கத்தில் இணைத்­தி­ருக்க வேண்டும். அத்­துடன் பரீட்­சார்த்­திகள் விடை எழு­து­வ­தற்கு பென்சில் அல்­லது பேனா பயன்­ப­டுத்­து­வ­தற்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

மேலும் பிள்­ளை­களை பரீட்­சைக்கு அழைத்துச் செல்லும் பெற்­றோர் பரீட்சை நிலை­யத்­திற்­குள்ளோ, பரீட்சை நிலைய வளா­கத்­திற்­குள்ளோ செல்­வ­தற்கு

அனு­மதி மறுக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் இடை­வேளை நேரத்­திலும் பெற்­றோர் பரீட்சை நிலைய வளா­கத்­திற்குள் செல்­வ­தற்கு தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ளது. ஆகவே பிள்­ளைகள் பரீட்சை நிலைய வளா­கத்­திற்குள் நுழை­யும்­போது அவர்­க­ளுக்­கான உண­வையும் தண்­ணீர்­போத்­த­லையும் தயார் செய்து அனுப்­பு­மாறு பெற்­றோரை பரீட்சைகள் திணைக்­களம் வேண்­டி­யுள்­ளது.

இதே­வேைள பரீட்சை மேற்­பார்­வை­யா­ளர்கள் உட்­பட பரீட்சைக் கட­மை­களில் ஈடு­ப­டு­ப­வர்கள்  பரீட்சை நிலை­யத்­திற்குள் கைய­டக்கத் தொலை­பேசி பயன்­ப­டுத்­து­வது தடை­செய்­யப்­பட்­டுள்­ளது. மேலும் அனு­ம­தி­ய­ளிக்­கப்­பட்ட அதி­கா­ரிகள் தவிர்ந்த வேறு எவரும் பரீட்சை நிலைய வாளா­கத்­திற்குள் நுழை­வ­தற்கு தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் அன்­றைய தினம் பாட­சாலை அதி­பரின் காரி­யா­ல­யத்தை மூடு­மாறும் பாட­சா­லையில் மேற்­கொள்­ளப்­படும் கட்­டு­மா­னப்­ப­ணிகள் உட்­பட சகல வேலைத்­திட்­டங்­க­ளையும் நிறுத்­து­மாறும்  பரீட்சைகள் திணைக்­களம் அதி­பர்­க­ளுக்கு அறி­வு­றுத்தல் வழங்­கி­யுள்­ளது.

அத்­துடன் பரீட்சை முடிந்த பின்­னரும் வினாப்­பத்­தி­ரங்­களை தம்­வசம் வைத்­துக்­கொள்ளல், பிரதி பண்ணல் என்­பன பொலி­ஸா­ரினால் கைது செய்யத் தகுந்த குற்­றங்­க­ளாகும்.  எனவே  பரீட்சை நட­வ­டிக்­கை­க­ளுக்கு இடை­யூறு ஏற்­ப­டுத்தும் வகையில் செயற்­ப­டு­ப­வர்­களை கைது செய்து சட்ட நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு பொலிஸ் தலை­மை­ய­கத்­திடம் வேண்­டுகோள் விடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பரீட்சைகள் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. மேலும் தரம் ஐந்து புல­மைப்­ப­ரிசில் பரீட்சை தொடர்

பில் முறைப்­பா­டுகள் இருப்பின் அதனை பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற அவசர சேவை இலக்கத் துடனும் பொலிஸ் நிலையத்தின் அவசர சேவை இலக் கமான 119 இற்கும் பரீட்சைகள் திணைக்களத்தின்  011 2784208, 011 2784537, 011 3188350, 011 3140314 என்ற தொலைபேசி இலக்கங்களுடனும் தொடர்பு கொண்டு தெரியப்படுத்துமாறும் பரீட்சைகள்   திணைக்களம் வேண்டியுள்ளது.

Leave a comment