நடிகர் ரஜினிகாந்த்துடன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சந்திப்பு மேற்கொண்டுள்ளார்.
திருநாவுக்கரசரின் இளைய மகள் அம்ருதா.
இவருக்கும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் இசக்கிசுப்பையா மகன் இசக்கிதுரைக்கும் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளது.
அம்ருதா- இசக்கிதுரை திருமணம் வருகிற செப்டம்பர் 3ஆம் திகதி சென்னையில் நடைபெறுகிறது.
இந்தநிலையில், இன்று காலை திருநாவுக்கரசர் சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு சென்றார்.
அங்கு தனது மகளின் திருமண அழைப்பிதழை ரஜினியிடம் கொடுத்தார்.
இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தனர். பின்னர் அங்கிருந்து திருநாவுக்கரசர் விடை பெற்றார். அவரை வாசல் வரை வந்து ரஜினி வழி அனுப்பி வைத்தார்.

