அசாம் வெள்ளத்தில் 140 வனவிலங்குகள் பலி

4235 0
அசாம் மாநிலத்தில் பெய்து வரும் அடைமழைக் காரணமாக காசிரங்கா தேசியப் பூங்காவில் உள்ள 140 விலங்குகள் பலியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த வெள்ளத்தில் சிக்கி இரு யானைகள், 10 காண்டா மிருகங்கள், 120இற்கும் மேற்பட்ட சதுப்பு மான்கள் உயிரிழந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுமார் 500 சதுர கிலோமீற்றர் பரப்பளவு கொண்ட குறித்த பூங்காவில் தற்போது 80 வீதமான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதாகவும்,இந்த நிலை நீடித்தால் இங்குள்ள அரிய மிருகங்கள் உயிரிழக்க நேரிடும் அதேவேளை பல மிருகங்கள் மக்கள் குடியிருப்புக்கு செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை அசாமில் கடந்த பல நாட்களாக பெய்து வரும் அடைமழைக் காரணமாக பிரமபுத்திரா உள்ளிட்ட பல பெருகியுள்ளதுடன் மக்கள் பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,இவர்களை மீட்கும் நடவடிக்கையில் மீட்பு படைகள் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Leave a comment