தலைமைப் பதவியில் இருந்து விலகியுள்ள டெரன் சமி

6013 0
கரிபியின் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் சென் லூசியா அணியின் தலைமைப் பதவியில் இருந்து டெரன் சமி விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அணி தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருகின்றமையினால் டெரன் சமி இந்த முடிவினை எடுத்துள்ளதாக கரிபியன் தகவல்கள் தெரிவித்துள்ளன.
டெரன் சமியின் தலைமையின் கீழ் குறித்த அணி 6 போட்டிகளில் விளையாடியுள்ளதுடன்,இந்த அணி இதுவரை போட்டியில் கூட வெற்றிப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய சென் லூசியா அணியின் தலைவராக அவுஸ்திரேலிய அணியின் சகலத்துறை ஆட்டக்காரர் சேன் வொட்சனை நியமிக்க அணியின் நிர்வாகத்தினர் தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment