பிணை முறி தொடர்பான விசாரணைகளை நிறைவு செய்ய வேண்டும்- உதய கம்மன் பில

388 0
மத்திய வங்கியின் பிணைமுறி சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் ஒன்றிணைந்த எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் பல நேற்று விசேட கருத்தரங்கு ஒன்றை மேற்கொண்டன.
இந்த கருத்தரங்கில் தொழிற்சங்கங்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதில் கலந்து கொண்ட பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் பிரதான செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன் பில, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு முன்னர் பிணை முறி தொடர்பான விசாரணைகளை நிறைவு செய்ய வேண்டும் என குறிப்பிட்டார்.

Leave a comment