மகிந்த அணியில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.கொழும்பு – விஜயராம மாவத்தையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதேநேரம், இந்த சந்திப்பை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே, பிணை விநியோக மோசடி குறித்த முக்கியமான பல விடயங்களை வெளியிடவிருப்பதாக தெரிவித்தார்.
தற்போது இந்த விடயம் குறித்த சிறிய அளவான தகவல்களே வெளியாகி இருப்பதாகவும், முக்கியமான பலத் தகவல்களை தாங்கள் வெளிப்படுத்தவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

