ஊழல் செய்தவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும், அதற்கு அரசியல் கட்சிகள் ஏன் வலியுறுத்தவில்லை என கமல்ஹாசன் கூறுவது வெறும் பேச்சுதான் என்று சீமான் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையை அடுத்த தாம்பரத்தில் நாம் தமிழர் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
அதில் உரையாற்றிய சீமான், சாதி வேண்டாம் என்று சொல்கிற ஒருவர் இருந்தால் சொல்லுங்கள், நான் தலைமை ஏற்கிறேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
நடிகர் சிவாஜிகணேசன் சிலையை அதே இடத்தில் வைக்க கமல்ஹாசன் குரல் கொடுப்பேன் என்று சொல்லட்டும். அவருடன் சேர்ந்து நானும் குரல் கொடுக்கிறேன்.
ஊழலை எதிர்த்து ஒரு ஆர்ப்பாட்டம் செய்வோம் என கமல்ஹாசன் தெரிவிக்கட்டும். நாங்கள் அதில் கலந்து கொள்ள தயாராக இருக்கிறோம்.
தமிழகத்தில் ஊழல் செய்தவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும். அதற்கு அரசியல் கட்சிகள் ஏன் வலியுறுத்தவில்லை என கமல்ஹாசன் கூறுவது வெறும் பேச்சுதான். ராஜினாமா செய்ய இங்கு யாரும் காமராஜர் போல் இல்லை என சீமான் குறிப்பிட்டுள்ளார்.

