அவசரமாக கூடுகிறது டெலோ இயக்கத்தின் தலைமை

265 0

டெலோ இயக்கத்தின் தலைமைக்குழு கூட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி வவுனியாவில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.

இதில் கலந்துகொள்ளுமாறு, வடமாகாண போக்குவரத்து அமைச்சர்.

பா.டெனீஸ்வரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் அமைச்சரவை மாற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் அவரை பதவி விலகுமாறு கட்சியின் தலைமைக்குழு கோரி இருந்த போதும், அதற்கு டெனீஸ்வரன் மறுப்பு தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையிலேயே அவர் மீண்டும் தலைமைக்குழு கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment