மஹிந்த காலத்து ஊழல்கள் குறித்து ஆராய விசேட நீதிமன்றம் வேண்டும்  

15546 102

முன்னைய அரசாங்க காலத்தில் இடம்பெற்ற ஊழல்கள் குறித்த விசாரணைகள் தொடர்பில் நேற்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கத்தின் இரண்டரை வருட ஆட்சிக்காலத்தில், கடந்த கால ஊழல்கள் குறித்த விசாரணையில் போதுமான முன்னேற்றம் இல்லை என்று அமைச்சர்கள் சிலர் இதன்போது சுட்டிக்காட்டினர்.

இந்த நிலையில் இவ்வாறான ஊழல்கள் தொடர்பான விசாரணைக்காக விசேட நீதிமன்றம் ஒன்றை உருவாக்குமாறு அமைச்சர்கள் கோரிக்கை விடுத்ததாக சிரேஷ்ட்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் அரசியல் யாப்பில் திருத்தங்களை ஏற்படுத்தினால் மாத்திரமே அவ்வாறான நீதிமன்றத்தை அமைக்க முடியும் என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment