மஹிந்த தலைமையில் முக்கிய கூட்டம்

12897 0

மஹிந்த அணியில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பு – விஜயராம மாவத்தையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதேநேரம், இந்த சந்திப்பை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே, பிணை விநியோக மோசடி குறித்த முக்கியமான பல விடயங்களை வெளியிடவிருப்பதாக தெரிவித்தார்.

தற்போது இந்த விடயம் குறித்த சிறிய அளவான தகவல்களே வெளியாகி இருப்பதாகவும், முக்கியமான பலத் தகவல்களை தாங்கள் வெளிப்படுத்தவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, மத்திய வங்கியின் பிணைமுறி சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் ஒன்றிணைந்த எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் பல நேற்று விசேட கருத்தரங்கு ஒன்றை மேற்கொண்டன.

இந்த கருத்தரங்கில் தொழிற்சங்கங்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதில் கலந்து கொண்ட பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் பிரதான செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன் பில, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு முன்னர் பிணை முறி தொடர்பான விசாரணைகளை நிறைவு செய்ய வேண்டும் என குறிப்பிட்டார்.

Leave a comment