வடக்கின் வன்முறைகள் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவை அல்ல – இராணுவத் தளபதி 

12264 0

வடக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்ற வன்முறைகள் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவை அல்ல என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.

காவற்துறையினர் மீது யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து, அங்கு பாதுகாப்புத் தரப்;பினரின் பிரசன்னம் மேலோங்கியுள்ளமை குறித்து செய்தியாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.

இதன்போது, பாதுகாப்பு தரப்பினரின் பிரசன்னம் அதிகரித்துள்ளமையை மறுக்காத இராணுவப் பேச்சாளர், காவற்துறையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களானது உள்ளுர் பிரச்சினை என்றும், அவற்றை தேசியப் பிரச்சினையாக பார்க்க வேண்டியதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இந்த பிரச்சினைகளை தேசிய பாதுகாப்புடன் தொடர்பு படுத்தவே அனைவரும் முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், நீதிபதி இளஞ்செழியனின் பாதுகாப்பு அதிகாரியின் மீது துப்பாக்கித் தாக்குதலை நடத்தியவர் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டவர் என்றாலும், அவர் 1996ம் ஆண்டே அந்த இயக்கத்துடன் இணைந்து செயற்பட்டுள்ளார்.

எனவே இந்த சம்பவத்தை விடுதலைப் புலிகளுடன் தொடர்புபடுத்தக்கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Leave a comment