இலங்கை இந்திய கடல்சார்பிரச்சினைக்கு தீர்வு என்ன?  

416 0

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் கடற்றொழில்சார்ந்த பிரச்சினையை தீர்த்துக் கொள்ள, இந்திய அரசாங்கம் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச கடற்சார் சட்ட நிபுணரும், யுனெஸ்கோவின் சர்வதேச சமுத்திரவியல் ஆணைக்குழுவின் தலைவருமான அல்ஃப்ரெட் எச்.ஏ. சூன்ஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஒருநாட்டின் எல்லைக்குள் அமையும் கடற்பிரதேசம் குறித்த முழுமையான இறைமை அந்த நாட்டுக்கே இருக்கிறது.

இதனை மீறி இந்நொரு நாட்டின் கடற்றொழிலாளர்கள் சட்டவிரோதமாக பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபடுவதை அந்த நாட்டினால் ஏற்றுக் கொள்ள முடியாது.

எவ்வாறாயினும் இந்த பிரச்சினைக்கு அப்பால் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் அரசியல் சார்ந்த நல்லுறவு உள்ளது.

எனவே இந்திய அரசாங்கம் இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அல்லாத பட்சத்தில் இலங்கையினால் இந்திய மீனவர்களை தடுப்பதற்காக, சர்வதேச நீதிமன்றத்தில் முறைப்பாட்டையும் செய்ய உரிமை உண்டு.

ஆனால் ஐரோப்பிய நாடுகளைப் போலல்லாது, ஆசிய நாடுகளில் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவது சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு இடையில் மோதல்போக்கையே உருவாக்கும்.

இந்த நிலையில் எல்லை மீறுகின்ற மீனவர்களை கைது செய்வதும், அவர்களின் படகுகளை தடுத்து வைப்பதும் பிரச்சினைக்கு உரிய விடயம் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment