மற்றுமொரு ஆவா குழு உறுப்பினர் கைது 

243 0

ஆவா குழுவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின்பேரில் இளைஞர் ஒருவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் கொக்குவில் பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினரால் அவர் இன்று கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்தது.

கைது செய்யப்பட்டவர் 21 வயதுடையவராவார்.

அவரிடமிருந்து நீல நிற உந்துருளி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் காவல்துறை தலைமையகம் தெரிவித்தது.

Leave a comment