லொத்தர் சபைகளை மீண்டும் நிதியமைச்சின் கீழ்

349 0

லொத்தர் சபை­களை நிதி­ய­மைச்சின் கீழ் மீண்டும் கொண்டு வர அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது.

கடந்த சில மாதங்­க­ளுக்கு முன்னர் நடை­பெற்ற அமைச்­ச­ரவை மாற்­றத்தின் போது முன்னாள் நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க வெளி­நாட்­ட­லு­வல்கள் அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்தார்.

இதன்­போது அவ­ரது பலத்த வற்­பு­றுத்தல் கார­ண­மாக நிதி­ய­மைச்சின் கீழ் இயங்கி வந்த அபி­வி­ருத்தி லொத்தர் சபை மற்றும் தேசிய லொத்தர் சபை ஆகி­யன வெளி­நாட்­ட­லு­வல்கள் அமைச்சின் கீழ் இணைக்­கப்­பட்­டி­ருந்­தன.

இந்த நிலையில் மத்­திய வங்கி பிணை முறி மோசடி விவ­காரம் கார­ண­மாக ரவி கரு­ணா­நா­யக்க வெளி­நாட்­ட­லு­வல்கள் அமைச்சுப் பத­வி­யி­லி­ருந்து இரா­ஜி­னாமா செய்­தி­ருந்தார்.

இத­னை­ய­டுத்து, லொத்தர் சபைகள் இரண்­டையும் வெளி­நாட்­ட­லு­வல்கள் அமைச்சின் பட்­டி­ய­லி­லி­ருந்து அகற்றி அவற்றை மீண்டும் நிதி­ய­மைச்சின் கீழ் கொண்டு வர அர­சாங்கம் உத்­தே­சித்­துள்­ளது.

தற்போதைய நிதி மற்றும் ஊடக அமைச்சராக மங்கள சமரவீர செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment