அர்ஜுன் மகேந்திரனின் தொடர்பாடல் மற்றும் இலத்திரனியல் கருவிகளை கையளிக்க உத்தரவு

287 0

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன் மகேந்திரன் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரின் தொடர்பாடல் மற்றும் இலத்திரனியல் கருவிகளை குற்றப் புலனாய்வுப் பிரிவில் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பிணை முறி ஆணைக்குழு இந்த உத்தரவை நேற்று விடுத்துள்ளது.

குறித்த கருவிகளில் இருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவு தரவுகளை பிரித்தெடுக்கவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை சட்டமா அதிபர் திணைக்களமும், பிணை முறி விநியோக மோசடி குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவும் முன்னெடுக்கவுள்ளன.

இந்த கருவிகளில் இருந்து தரவுகள் பிரித்தெடுக்கப்படும் போது, அர்ஜுன் மகேந்திரன் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரின் சட்டத்தரணிகள் பிரசன்னமாகி இருக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் பேர்ப்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸின் தொடர்பாடல் சாதனங்களில் இருந்து தரவுகள் பிரிக்கப்பட்டிருந்தன.

இதன்அடிப்படையிலேயே முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க விசாரணைக்கு அழைக்கப்பட்டதுடன், அவர் பதவி விலகவும் நேர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment