யாழ்ப்பாணம் – பருத்தித்துறை – மணற்காடு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவித்து, 5 உள்ளுர் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரவு நேரத்தில் நீரில் மூழ்கி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த அவர்கள், தங்களின் 2 அதிவேகப் படகுகளுடன் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்படையினரின் ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதானவர்கள் பருத்தித்துறை காவற்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

