இலங்கையின் வடக்கில் இடம்பெறும் எந்த செயல்களுக்கும் விடுதலைப்புலிகளை தொடர்புபடுத்துவதானது மக்களை தவறாக வழிநடத்தும் என்று இராணுவ தளபதி மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.வடக்கில் இடம்பெறும் சில குழுக்கின் செயற்பாடுகள் தேசியப் பதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைத்துள்ள அவர், வடக்கில் இடம்பெறும் வன்செயல்களுக்கு விடுதலைப்புலிகளின் பெயரை பயன்படுத்துவதை தாம் விரும்பவில்லை.
தெற்கில் இடம்பெறுகின்ற போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு 1971ஆம் ஆண்டு கிளர்ச்சிப்பிரிவுகளின் பெயர்களை பயன்படுத்த முடியாது போலவே வடக்கின் செயல்களுக்கும் விடுதலைப்புலிகளை தொடர்படுத்தமுடியாது.
குறிப்பாக ஆவா குழு விடுதலைப்புலிகள் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்களில் ஒருவர் செய்யும் செயலுக்காக புனர்வாழ்வுப்பெற்ற 12ஆயிரம்பேரையும் குற்றம் கூறுவது சிறந்த சாணக்கியம் அல்ல என்றும் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

