முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உட்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அங்கத்துவத்தை கொண்டுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜீ.எல் பீரிஸின் கட்சியின் அங்கத்துவத்தை பெறவுள்ளனர்.இந்த தகவலை முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவருமான ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதத்தில் இந்த புதிய அங்கத்துவ இணைவு இடம்பெறும் என்றும் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களும் புதியக்கட்சியில் இணைய விருப்பம் கொண்டுள்ளதாக பீரிஸ் தெரிவித்துள்ளார்
எனினும் குறித்த உறுப்பினர்கள் புதியக்கட்சியில் இணைந்தால், அது அவர்களின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்துக்கு பிரச்சினையை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது
என்றாலும் அதனை எதிர்கொண்டு தொடர்ந்தும் அவர்கள் நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் பெறும் நிலை உறுதிசெய்யப்படும் என்று ஜீ.எல் பீரிஸ் குறிப்பி;ட்டுள்ளார்.

