மாலபே தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் -ஜே.வி.பி

332 0

மாலபே தனியார் மருத்து கல்லூரி தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் என ஜேவிபி, அரசாங்கத்தை கோரியுள்ளது.

பண்டாரவளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றம் போதே, ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி லால்காந்த் இந்த கோரிக்கையை விடுத்தார்.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கத்திற்கு வேண்டிய அளவு வாய்ப்பு உள்ளது.

ஆனாலும் அதனை எதற்காக அரசாங்கம் மேற்கொள்ளாதுள்ளது என்பது தொடர்பில் புரிந்து கொள்ள முடியவில்லை எனவும் கே.டி லால்காந்த் குறிப்பிட்டார்.

Leave a comment