இந்தியாவின் – ஹிமாசல்பிரதேஸ் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி 2 பேரூந்துகள் பள்ளத்தில் வீழ்ந்ததில் 30க்கும் அதிகமானோர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அந்த மாநிலத்தில் உள்ள மன்டி – பதன்கொட் பகுதிகளுக்கிடையிலான வீதிலேயே இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது 2 பேருந்துகளும் சுமார் 800 மீற்றர் பள்ளத்தில் வீழ்ந்ததாக இந்திய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது அங்கிருந்து 7 உடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் 20க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமது அனுதாபங்களை டுவிட்டர் வளையத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

